சூர்யா -பாலா இணைந்திருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.
இயக்குனர் பாலா-சூர்யா கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா-41 திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இதனிடையே பயில்வான் ரங்கநாதன் பாலாவை பற்றி கூறியது தான் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளதாவது, “பாலா ஒரு சேடிஸ்ட். அவருக்கு அழகான பெண்களை பிடிக்காது. அதனால்தான் தன் படங்களில் நடிகைகளை கருப்பாக்கி அசிங்கமாக காட்டுவார்” என கூறியிருந்தார். இந்நிலையில் கீர்த்தி ஷெட்டியை பாலா என்ன செய்ய போகிறார் என்ற கவலை ரசிகர்களுக்கிடையே அலைமோதி வருகின்றது.