Categories
தேசிய செய்திகள்

தொடங்கியது ரத்ததான முகாம்…. நீங்களும் ஒரு பகுதியாக இருங்கள்!…. அமைச்சர் மாண்டவியா டுவிட்….!!!!

பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளையொட்டி 15 நாள் ரத்ததான முகாம் இன்று துவங்கியது. மத்திய சுகாதார அமைச்சரான மன்சுக் மாண்டவியா சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்ட முகாமில் ரத்ததானம் செய்தார். இன்று முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும் “ரக்தன் அம்ரித் மஹோத்சவ்” இன் ஒருபகுதியாக ரத்த தானம் செய்ய குடிமக்கள் ஆரோக்யா சேது செயலி (அல்லது) இ-ரக்ட்கோஷ் போர்ட்டலில் பதிவுசெய்யுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதுவரையிலும் நாடு முழுதும் 5,857 முகாம்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது மற்றும் 5,58,959 பேர் பதிவுசெய்துள்ளனர். அவற்றில் இதுவரையிலும் 4,000 பேர் ரத்ததானம் செய்து உள்ளனர். இந்த சிறந்த பணியில் நீங்களும் ஒருபகுதியாக இருங்கள் என மாண்டவியா இந்தியில் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  அதில் “இந்த இயக்கமானது நாள் ஒன்றில் 1 லட்சம் யூனிட் ரத்தத்தைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் தன்னார்வ ரத்ததானங்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு யூனிட் என்பது 350 மில்லி ரத்தம் ஆகும். ஒவ்வொரு ரத்ததானம் செய்வோரும் ஒரு உயிர்காப்பான்” என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |