அமேசான் 2022ஆம் ஆண்டு காண சம்மர் சேல்லை தொடங்கியுள்ளது. இதில் என்ன பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.
2022 ஆம் ஆண்டுக்கான கோடைகால விற்பனையை அமேசான் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் அமேசான் தளத்தில் அதற்கான போஸ்டர்கள் உள்ளன. இந்த முறை லேப்டாப், ஸ்மார்ட் போன்கள், வீட்டுக்கு தேவையான பொருள்கள், ஏசி மற்றும் பிரிட்ஜ் போன்ற பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி வழங்க உள்ளது. மேலும் ஐசிஐசிஐ பேங்க், ஆர்பிஎல் பேங்க், கோடக் பேங்க், அமேசான் இந்தியா ஆகியவை கூட்டு சேர்ந்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் பொருட்களை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி வழங்குகின்றது.
மொபைல் மற்றும் அதன் பாகங்கள் வாங்குவதற்கு 40% தள்ளுபடி பெற முடியும். வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கும் 30 சதவீதம் தள்ளுபடியும் அமேசான் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது ஏசி, ஏர்கூலர், மரச்சாமான்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவற்றிற்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. பிரிட்ஜ் மற்றும் ஏசி போன்றவற்றிற்கு 40 முதல் 50 சதவீதம் தள்ளுபடியும், செல்போன்களுக்கு டிவி பிராண்டுகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடியும் வழங்க உள்ளது. இத்துடன் நீங்கள் பஜாஜ் பின்சர்வ் கார்டை பயன்படுத்தினால் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு கட்டணமில்லா இஎம்மை-யைப் பெறலாம்.