கொரோனா தொற்றின் மூன்றாம் அலை குழந்தைகளுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இருப்பினும் கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் ஒரு பக்கம் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்தியாவில் அக்டோபரில் மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர்க்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இதைத்தொடர்ந்து சண்டிகரின் முதுமை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் 71 சதவீதம் குழந்தைகளுக்கு ஆண்டிபயாட்டிக் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். இயக்குநர் டாக்டர் ஜெகத் ராம் தெரிவித்துள்ளதாவது: “தற்போது குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் தொற்று குழந்தைகளை பாதிக்குமா என்று கேள்வி எழுந்து வருகின்றது. குழந்தைகளுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளது. தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 71 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்காது என்று தெரிவித்துள்ளார்.