இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பம் தற்போது படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வரும் மார்ச் 15ஆம் தேதி குருகிராமில் வெப்பம் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போன்று குறைந்தபட்சமாக வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.