Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடந்து அதிகரிக்கும் கடத்தல்… வசமாக சிக்கிய 5 பேர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்த பெண் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக்கின் உத்தரவின்படி கேணிக்கரை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பட்டனம்காத்தான் வல்லபைநகர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அந்த காரை சோதனை செய்தபோது அதில் 23 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் காரில் இருந்த 5 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஹேமலதா, ரஞ்சித்குமார், ஓம்சக்தி நகரை சேர்ந்த அஜய்குமார், சாம்ராஜ், காஞ்சிபுரத்தை சேர்ந்த மாதவன் என்பது தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து ஹேமா மற்றும் ரஞ்சித்குமார் மீது ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையில் காவல்துறையினர் அந்த 5 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்த 23 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவர்கள் சென்னையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |