Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடரும் அட்டகாசம்” முகாமிட்டுள்ள யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்….!!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் ரேஷன் கடையை உடைத்து அரிசியை தின்றும் வீசியும் சேதப்படுத்தியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை விரட்டி அடித்தனர்.

நேற்று முன்தினம் மீண்டும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |