காட்டு யானைகள் 200-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோழிக்கண்டி பகுதியில் இருக்கும் தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானைகள் நுழைந்தது. இந்த காட்டு யானைகள் வாழை மரத்தை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் வாழை மரங்கள் நாசமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட வாழைகளை யானை சேதப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.