Categories
உலக செய்திகள்

தொடரும் அவல நிலை… கருப்பினத்தவர் கொலை…. பூகம்பமாய் வெடித்த கலவரம்….!!

கறுப்பினத்த நபர் ஒருவர் பாதுகாவலர்களால் அடித்து கொல்லப்பட்டதையடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்துள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள போர்டோ அலெகிரே நகரத்திலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(40) என்பவர் பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பல்பொருள் அங்காடி முழுவதும் போராட்டக்காரர்கள் சூறையாடப்பட்டுள்ளது. பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

பிரேசிலில் ஏற்கனவே கறுப்பின மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் அங்குள்ள மக்களையும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவம் நடந்த அந்த பல்பொருள் அங்காடியின் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்த பல்பொருள் அங்காடி நிறுவனம் பெரும் வருத்தம் தெரிவித்ததோடு, இதில் சம்பந்தப்பட்ட பாதுகாவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

Categories

Tech |