Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடரும் ஆற்று மணல் கொள்ளை… சோதனையில் சிக்கிய லாரிகள் …கைது செய்த போலீஸ் …!!!

தஞ்சையில் ஆற்றுப்பகுதிகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்ட லாரிகளை போலீசார் மடக்கி  பிடித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை, பாபநாசம், மெலட்டூர் போன்ற ஆற்றுப்பகுதிகளில்
மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டான ஆனந்தின் உத்தரவின்படி ,பாபநாசம் இன்ஸ்பெக்டரான விஜயா, அய்யம்பேட்டை  இன்ஸ்பெக்டரான அழகம்மாள் மற்றும் மெலட்டூர் சப்- இன்ஸ்பெக்டரான உமாபதி ஆகிய போலீசார் ,நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள  குடமுருட்டி, காவிரி மற்றும் வெட்டாறு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த லாரிகளை மடக்கிப் பிடித்தனர். இந்த பகுதிகளிருந்து சுமார்   எட்டு லாரிகளை, அதவாது பாபநாசம் பகுதியில்  2 லாரி ,அய்யம்பேட்டை பகுதியில்  3 லாரி மற்றும் மெலட்டூர் பகுதியில்  3 லாரி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் 8 லாரி டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |