Categories
தேசிய செய்திகள்

தொடரும் ஆழ்துளை சம்பவம்…. ஒரே குழியில் 2 சிறுவர்கள் பலி…. பெரும் சோகம்…!!!!

ஒரே குடும்பத்தை சேந்த இரண்டு சிறுவர்கள் போர் போடப்பட்ட பகுதியில் சேற்றில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

புதுச்சேரி வில்லியனூரில் உள்ள  பெரம்பை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கொத்தனார் வேலை செய்கிறார். இவரது மனைவி  இனித்தா தம்பதியினருக்கு லெவின் மற்றும் லோகித்  என 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு நான்கு வயது மற்றும் மூன்று வயதாகிறது. இவர்கள் இருவரும் மாலையில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது அச்சிறுவர்களை காணவில்லை. இதனால் அவர்களது பெற்றோர்கள் இருவரையும் தேடியுள்ளனர்.

இச்சிறுவர்கள் இருவரும் வீட்டுக்கு அருகில் உள்ள காலி நிலத்தில் போர் போடப்பட்டு அதிலிருந்து வெளியான சேறு கலந்த நீரின்  பள்ளத்தில் விழுந்து மூச்சற்ற நிலையில் இருந்துள்ளனர்.மேலும் அவர்களது பெற்றோர்கள் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் அவர்களை மீட்டு புதுச்சேரி வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றபோது இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவர்கள் போர் போடப்பட்ட பகுதியில் சேற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி அந்த கிராமமே உடைந்து போயிருக்கிறது. இதனை தொடர்ந்து இரண்டு சிறுவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |