Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு ஆர்.டி.ஓ. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறதுண் அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள 11 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து முனியப்பன் நகரில் சுமார் 250 வீடுகளுக்கு செல்லும் ரோடு தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் காவிரி கரை பகுதிகளுக்கு நேரில் சென்று நேற்று சோதனை மேற்கொண்டார். அப்போது காவிரி கரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் யாரும் ஆற்றுக்குள் செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் ஈரோடு தாசில்தார் ரவிச்சந்திரன் உடன் இருந்தார்.

Categories

Tech |