தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்றும் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை இடாமல் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கியுள்ள நிலையில் இந்த நிலை நீடித்தால் நாளையும் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.