Categories
மாநில செய்திகள்

தொடரும் கனமழை…. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு…. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 65,000க்கும் அதிகமான தண்ணீர் ல வருகிறது. திருவல்லம் வழியாக வரும் பொன்னையாறு மேல்விசாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது.

இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றில் 84 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வாலாஜா தடுப்பணை நிரம்பி வந்து கொண்டிருக்கிறது. அங்கு தடுப்பணை நிரம்பி வழிந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து ராணிப்பேட்டையில் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதையடுத்து இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று இரவு கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |