Categories
மாநில செய்திகள்

தொடரும் கனமழை…. மின் வாரியத்தை காப்பாற்றிய ஒருங்கிணைந்த பராமரிப்பு பணி…..!!!!

தொடர் மழை பெய்து வருகின்ற போதிலும் மின்வினியோகம் சாதனங்களில் எந்த சேதமும் ஏற்படாமல் இருப்பதற்கு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த பராமரிப்பு பணியை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாள் மின்தடை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து மின்சாதனங்கள் முழுவீச்சில் பராமரிக்கப்படவில்லை மேலும் கோடை நேரத்தில் அதிகமாக மின்சாரத் தேவை உள்ளதால் பராமரிப்பு பணி நடக்கவில்லை.

இதையடுத்து திடீரென கோடை மழை பெய்ததால் ஆங்காங்கே மின்கம்பி போன்ற சாதனங்களில் தண்ணீர் பட்டு பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து மின்வாரியம் ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு திட்டத்தை ஜூன் மாதம் 19 முதல் அந்த மாத கடைசி வரை செயல்படுத்தியது. அந்தப் பராமரிப்பில் மின் சாதனங்களில் படர்ந்தும் பக்கத்தில் இருந்த 84,000மரக்கிளைகள் நீக்கப்பட்டன.

மேலும் 92,000 சேதமடைந்த கம்பங்கள் சீரமைக்கப்பட்டது. தனிவாக சென்ற கம்பியை உயரத்திற்கு எழுத்து கட்டுவது போன்ற பணிகள் நடைபெற்றது. மேலும் இந்த மாதம் ஆறாம் தேதி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. எனினும் மின் வினியோக சாதனங்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை இவற்றிற்கு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த பராமரிப்பு பணியை காரணம் எனினும் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்காக மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |