பொள்ளாச்சி அருகில் உள்ள பரம்பிக்குளம் அணையில் 71 அடி கொண்டது. இந்த அணைக்கு சோலையார் அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும் தண்ணீர் வருகிறது. அதுமட்டுமில்லாமல் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இதனால் கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு போதிய மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது .இந்நி லையில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் அணை 71 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் கரையோர வசிக்கும் கேரளா மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது, சோலையார் அணையின் மின் உற்பத்தி நிலையம்-1 மின் உற்பத்தி செய்யப்படும் பரம்பிக்குளம் அறைக்கு வினாடிக்கு 445 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் சேடல் பாதை வழியாக வினாடிக்கு 2000 கன அடி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அனைத்து வினாடிக்கு 300 கன அடி நீர்வரத்து உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் 71 அடியை எட்டி உள்ளது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக வினாடிக்கு 700 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக தூணக்கடவிற்கு வினாடிக்கு 500 கன அடி திறக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் 17,820 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம்