Categories
மாநில செய்திகள்

தொடரும் கொலை சம்பவம்… டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை வருகை…!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை வந்து, தென்மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்களை தடுக்க ஆலோசனை செய்கிறார்..

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவும், இந்த கொடூர சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவத்தால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்..

இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை வருகின்றார். நெல்லை மாநகர காவல்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் கொலை சம்பவங்களை தடுப்பது பற்றி ஆலோசனை நடத்த இருக்கிறார்..

முன்னதாக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகத்தில் நேற்று ஒரே இரவில் 560 ரவுடிகளை போலீஸ் கைது செய்து அதிரடி காட்டியது.. தமிழகத்தில் கொலை சம்பவம் அடிக்கடி அரங்கேறி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது..

 

Categories

Tech |