Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடரும் சட்டவிரோத செயல்…. சுடுகாட்டில் நின்று கொண்டிருந்த வாலிபர்…. வளைத்து பிடித்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்திராநகர் சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் மேலக்கோட்டை பகுதியை சேர்ந்த முகம்மது கனி(22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் முகம்மது கனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |