Categories
தேசிய செய்திகள்

தொடரும் சில்லறை பணவீக்கம்….. இப்படியே போனால்….. இந்தியா நிலை அவ்வளவு தான்…..

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் சில்லரை விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மார்ச் மாத சில்லறை விலை பணவீக்கம் 6.7 சதவீதத்திலிருந்து 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம் ஏப்ரலில் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சில்லறை விலை பணவீக்கம் 7.61% ஆக உயர்ந்திருந்தது. நுகர்வோர் விலை குறிப்பிட்டு பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் சில்லறை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை தொடர்ந்து 4வது மாதம் தாண்டியுள்ளது.

சில்லரை பணவீக்கத்தை 2% முதல் 6% வரை வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து இருப்பது இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி செல்வதை சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இதனால் அரிசி, பருப்பு, எண்ணெய், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Categories

Tech |