திரைப்பட சண்டைக் காட்சிகளில் சல்மான் கானுக்கு பதிலாக நடிக்கும் (Body Double) ஸ்டண்ட் கலைஞர் சாகர் பாண்டே காலமானார். சாகர் பாண்டே ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திரை பிரபலங்கள் பலர் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பால் இறந்து வரும் நிலையில், மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories