Categories
மாநில செய்திகள்

தொடரும் தடை… மக்கள் யாரும் இன்றி வெறிச்சோடிய மெரினா…!!

கொரோனா பரவலை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு செல்ல வார இறுதி நாட்களில் தடை விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் யாரும் இன்றி மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு என முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இதற்கு முன்பாகவே கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது வாரமாக நேற்றும், இன்றும் மெரினாவுக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மெரினா கடற்கரை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பிரதான சாலையான காமராஜர் சாலையில் நடந்து செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர். சர்வீஸ் சாலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Categories

Tech |