பள்ளி மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் உயிரே மாய்த்துக் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பள்ளி மாணவர்கள் இவ்வாறு தற்கொலை செய்வது மிகப்பெரிய தவறாகும். அந்த மாதிரி மாணவ மாணவிகள் தற்கொலைகளை தடுப்பதற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதாவது, படிக்கின்ற பள்ளி மாணவ- மாணவிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களிடம் தயக்கமின்றி கூறலாம் என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகிலுள்ள அழகு பெருமாள் குப்பம் கிராமத்தில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரஷியா(17). இவர் ஒறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த முடிந்த அரசு பொதுத்தேர்வில் இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடத்தில் இவர் தேர்ச்சி பெறவில்லை. ம் அதன் பிறகு மீண்டும் மறு தேர்வு முறையில் இரண்டு பாடத்துக்கும் தேர்வு எழுதினார். இதன் முடிவு முடிவு தற்போது வெளியானது. இதில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற அவர், இயற்பியல் பாடத்தில் மீண்டும் தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரஷியா நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த புதுப்பேட்டை போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.