தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ஆப்கான் ராணுவ வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் நடத்தியுள்ள தற்கொலைப் படை தாக்குதலில் அந்த நாட்டைச் சேர்ந்த 8 ராணுவவீரர்கள் பலியாகியுள்ளனர். இது பற்றி ராணுவம் தரப்பில் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் உள்ள மைதன் மாகாணத்தில் சையத் அபாத் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 8 ஆப்கன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்று பொதுமக்கள் மேல் ஆப்கன் ராணுவம் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவே இந்தத் தாக்குதல் நடத்தி இருப்பதாக தலிபான்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் படைகள் நடத்தியுள்ள தாக்குதலில் தலிபான்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முன் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் நடந்த போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களினுடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் அரசுகளுக்கு இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் அளித்ததின் விளைவாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டுள்ளது. சென்ற வருடம் 2001, செப்டம்பர் 1ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்துள்ளனர். அதன் பின் ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகி இருக்கின்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதற்காக, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிகுந்த சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.