Categories
உலக செய்திகள்

தொடரும் தாக்குதல்…. காயமடைந்த வீரர்கள்…. ஆறுதல் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி…!!

உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ரஷிய படைகளுக்கு எதிரான தாக்குதலில் போரிட்டு 134 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்யா-உக்ரைன் போரானது கடந்த 18 நாட்களாக நீடித்து வரும் நிலையில், பல நகரங்கள் மீது ரஷ்யா தனது உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் Hostomel மற்றும் Irpin ஆகிய இரு நகரங்களில் ராணுவ வீரர்கள் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு எதிராக போரிட்டு வந்தனர். இதையடுத்து அந்தப் போரில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலானது, போலந்தின் எல்லையில் உள்ள ராணுவ பயிற்சி தளத்தின் மீது  ரஷ்ய படையினர் கடுமையாக தாக்கி இருந்தனர். இந்த கடுமையான தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நடந்துள்ள இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 134 என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த தாக்குதலில் காயமடைந்த உக்ரைன் வீரர்களை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

Categories

Tech |