உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவை கைப்பற்றும் நோக்கத்தோடு ரஷ்யா பல முனை தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனில் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் உக்ரைன் – ரஷ்யா நாடுகளிடையே அமைதி பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை உக்ரைனை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 198 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதார மந்திரி தகவல் தெரிவித்துள்ளார். 4-வது நாளாக தொடர்ந்து வரும் போரில் இதுவரை 33 குழந்தைகள் உட்பட 1,115 உக்ரைனியர்கள் படுகாயமடைந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் ரஷ்ய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.