பர்கினோபாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள பர்கினோபாசோ நாட்டில் கடந்த 2015 -ஆம் வருடம் முதல் போகோஹரம், ஐ.எஸ் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ராணுவமும், போலீசாரும் சேர்ந்து இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்கு பல்வேறு தீவிர முயற்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி நடைபெறும் தாக்குதல் சம்பவங்களால் பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் பர்கினோபாஸோவின் போலோ பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் வந்து கண் இமைக்கும் நொடியில் காட்டுமிராண்டிதனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ராணுவத்திற்கு ஆதரவாக செயல்படும் பொதுமக்களை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.