கனடாவில் கட்டாய தடுப்பூசி மற்றும் அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை எதிர்த்து அம்பாஸடர் பாலத்தில் போராட்டம் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதனை கண்டித்து ஒட்டாவா மற்றும் பல பகுதிகளில் பலர் கட்டாய தடுப்பூசி, அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கனடா நாட்டில் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் அமல்படுத்தினார். அவர் போட்ட சட்டத்தின் கீழ் போராட்டக்காரர்களுக்கு எதிரான மிக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அபாரதங்கள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தலைநகரில் போராட்டங்களைக் கட்டுப்படுத்த தவறியதாக ஒட்டாவா காவல்துறை தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கொரோனா விதிமுறைகளை எதிர்த்து நடக்கும் இந்தப் போராட்டம் இரண்டு வாரங்களுக்கு மேல் நடைபெறுவதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போராட்டங்களை காவல் துறையினர் தடுப்பதற்கு தயங்கி வருவது அதிர்ச்சி அளிப்பதாக சிலர் புகார் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டின் தலைநகரை சிறு கும்பல் ஸ்தம்பிங்க செய்து பொருளாதாரத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காவல்துறை மெத்தனமாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் அறிவித்ததாவது போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பிரதமர் ஜஸ்டின் அவசரநிலை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறை தலமை அதிகாரி பீட்டர் ஸ்லாலி தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கனடா அரசு கடந்த 15ம் தேதி லாரி ஓட்டுநர்கள் சாலை வழியாக நாட்டிற்குள் திரும்பி வரும்போது கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லாரி ஓட்டுனர்கள் நாடு முழுவதும் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு 2022’ என்ற பெயரில் வாகனங்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். மேலும் ஏராளமான பாதசாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் கனடா அரசின் ஒட்டுமொத்த கட்டுப்பாடுகளுக்கும் எதிராக உருவெடுத்தது. இந்த நிலையில் சுமார் ஒரு வாரமாக ஏராளமானவர்கள் தங்கள் வாகனங்களை விண்ட்சரையும், ரெட்டராய்ட்டையும் இணைக்கும் எல்லை பாலமான அம்பாஸடரில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்து முடங்கியது .
இந்த போராட்டம் சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக ஆன்டோரியா உயர்நீதிமன்றதில் காணொளி மூலம் நடைபெற்ற வழக்கில் போராட்டகாரர்கள் அம்பாஸடர் பாலத்திலிருந்து போராட்டங்களை நிறுத்தி கலந்து செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவையும் மீறி சனிக்கிழமை மறியல் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களின் வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதற்கு பிறகு அம்பாஸடர் பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.