Categories
மாநில செய்திகள்

தொடரும் மதமாற்றம் புகார்….. தமிழக டிஜிபிக்கு வந்த அதிரடி உத்தரவு….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு செய்ததாலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்தது.

இது பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யா வாக்குமூலத்தில் எந்த இடத்திலும் அவர் மதமாற்றம் குறித்து பேசவில்லை என்றும், சகாயமேரி என்ற வார்டன் தன்னை விடுதியின் கணக்கு வழக்குகளை பார்க்க வற்புறுத்தியதால் தான் நான் களைக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், லாவண்யா கூறியுள்ளார். ஆனால் இந்துத்துவ அமைப்புகளோ மதம் மாற வற்புறுத்தியதால் தான் மாணவி உயிரிழந்ததாகக் கூறி வருகின்றனர். இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதுபற்றி தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத் தலைவர் பிரங்க் கனூங்கோ, தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, ஜனவரி 20-ஆம் தேதி அன்று எங்களுக்கு வந்த புகாரில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ- மாணவியரை சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மதமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத மாணவ ,மாணவியரை சித்ரவதைபடுத்தி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதுபோன்று தொடர்ந்து குற்றசாட்டு எழுந்து வருகிறது.

அதனால் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, குழந்தைகளின் உரிமைகளை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ ,மாணவியரிடம் புகாரை பெற்று அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி 7 நாட்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |