Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடரும் மாணவிகள் தற்கொலை…. மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

பாலியல் தொல்லைக்கு எதிராக கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது மாணவிகள் மீதான பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு வாரத்திற்கு முன்பாக கோவையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். மேலும் கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையால்  மாணவிகளின்  தற்கொலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கண்டித்து சென்னையில் உள்ள ஆர். கே . நகரில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் மாணவிகள் தற்கொலை செய்வதை தடுக்க பெற்றோர் ஆசிரியர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும், அரசு சமீபத்தில் வெளியிட்ட தொலைபேசி எண்ணை எல்லா வகுப்பறைகள் ஓட்ட  வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து கரூரில் தற்கொலை செய்து கொண்ட  மாணவியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது அவர்களை கடுமையாக தாக்கி  அலட்சியப்படுத்திய  போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற பல்வேறு  கோரிக்கைகளை  வலியுறுத்தி மாணவர்கள்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |