கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள நவக்கரை மலை கிராமத்தில் யானை வாளையாறு ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ரயில் ஒன்று 15 வயது மதிக்கத்தக்க அந்த யானை மீது மோதியதில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்ததால் அங்கேயே படுத்துக் கிடந்ததுள்ளது. இதை ரயில் ஓட்டுனர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் யானைகளின் மரணம் அதிகரித்திருப்பது பற்றி மநீம தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறது. இதையடுத்து நவக்கரையில் மீண்டும் ஒரு யானை அடிபட்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சூழியல் ஓர்மையற்ற அரசு விரட்டியடிக்கப்பட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.