உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 5 வாரங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா தனது படைகளை டான்பாஸ் நகரை நோக்கி நகர்த்தி உள்ளது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரமான புச்சாவில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புகார் நகரத்தின் துணைமேயர் தாராஸ் ஷப்ரவ்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், புச்சா நகரின் சாலையில் 300க்கும் மேற்பட்ட மனித உடல்கள் அங்குமிங்கும் சிதறி கிடப்பதாகவும், அதில் 50க்கும் மேற்பட்ட உடல்கள் போர் விதிமுறைகளை மீறி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மனிதர்களின் உடல்கள் எனவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து ரஷ்யாவின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய தாக்குதலுக்கு பின்னர் புச்சா நகரில் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படம் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.