Categories
உலக செய்திகள்

தொடரும் ரஷ்யாவின் தீவிர தாக்குதல்….!! உக்ரைனில் வான்வழிப் பகுதிகளுக்கு ரெட் அலார்ட்…!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 53 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயன்ற ரஷ்ய ராணுவத்தின் முயற்சி தோல்வி அடையவே ரஷ்ய வீரர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் மரியுபோல் நகரில் தொடர்ந்து குண்டுவீச்சு மற்றும் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. இர்ப்பின் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவிக்கிறது. ரஷ்யாவின் இந்த தீவிர தாக்குதலால் உக்ரைனின் கெர்சன் மற்றும் கிரிமியா பகுதிகளை தவிர மற்ற வான்வெளி பகுதிகளுக்கு உக்ரைன் ராணுவம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |