Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடரும் வரதட்சணை கொடுமை…. தற்கொலை செய்து கொண்ட மனைவி… பயங்கர சம்பவம்…..!!!!

கடலூர் புதுப்பேட்டை அருகில் உள்ள ஏ.பி. குப்பம் கிராமத்தை சுமன்ராஜ்(31) என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி சிவரஞ்சனி(30) இவர்களுக்கு மகன்(2) உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி சிவரஞ்சனி தூக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கந்தசாமி வரதட்சனை கொடுமையால் தனது மகள் சிவரஞ்சனி இறந்து விட்டதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்தி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது திருமணமான 3 ஆண்டுகளிலே சிவரஞ்சனி இருந்ததால் அவரது சாவு குறித்து கடலூர் கோட்டாட்சியர் மேல்விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், தனது மனைவியை சுமன்ராஜ் வரதட்சணை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் சிவரஞ்சனி தூக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து சிவரஞ்சனி தற்கொலைக்கு தூண்டியதாக கூறி சுமன்ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |