Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று…. ஏர் இந்தியா விமான சேவை ரத்து…. எங்கு தெரியுமா….?

கொரோனா தொற்று காரணமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பாகிஸ்தான், இந்தியா போன்ற எட்டு நாடுகளை சேர்ந்த விமான பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்தியாவில் இருந்து வரும் விமான பயணிகள் 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.  மேலும் இதில்  எந்த பாதிப்பும் இல்லை என்ற உறுதிச்சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த சேவையை கருத்தில் கொண்டு, ஹாங்காங்கிற்கான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Categories

Tech |