Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மலைப்பிரதேசங்களில் சதமடித்தது…. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அவதி…. அரசுக்கு கோரிக்கை…!!

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. இங்கு பெட்ரோல் லிட்டருக்கு 106.63 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 13 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 109.65 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 99.38 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 110.4 ரூபாயாகவும், டீசல் ஒரு லிட்டர் 100.14 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக கனரக வாகன ஓட்டிகள் மற்றும் டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது மலைப்பிரதேசங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டியதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வெளிமாநிலங்களிலிருந்து கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சந்தைக்கு விற்பனைக்காக வருகிறது. இதையடுத்து சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் வண்டிகளில் கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |