பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த அம்ரீதர் சிங்குக்கும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனையடுத்து இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்தும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும் தன்னுடைய அமைச்சரவை ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்ரிந்தர் சிங், தற்போது நான் காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். எதிர்கால நடவடிக்கை குறித்து எனது ஆதரவாளர்கள் கலந்து பேசி முடிவு செய்வேன். சமீபத்தில் நடந்த சம்பவங்கள் என்னை அவமானப்படுத்துவது போல் உள்ளது. இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேசியபோது அவரிடம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தேன்.
எனக்கு தெரியாமல் எம்எல்ஏக்கள் கூட்டம் நடப்பது இது மூன்றாவது முறை. இதனால் பதவி விலக முடிவு செய்தேன். தங்களுக்கு நம்பிக்கையாக இருக்கும் யாராக இருந்தாலும் கட்சி மேலிடம் முதல்வர் பதவியில் அமர்த்தட்டும் என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அமரீந்தர் சிங்க் ராஜனமா செய்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.