இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த நேபாள நாட்டு பிரதமர் கேபி ஷர்மா இன்று மாலை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வாய்ப்புக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது
இந்தியாவில் இருக்கும் சீக்கிம், பீகார், மேற்கு வங்காளம். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களுடன் 1,850 கிலோமீட்டர் எல்லையை நேபாளம் பகிர்ந்து வருகின்றது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் காலாபனி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகள் நேபாளம் தங்களுக்கு சொந்தமென கூறிவந்தது. இதனால் இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்டகாலமாக விரிசல் போக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனை இந்தியா ஏற்க மறுக்கும் அதனை பொருட்படுத்தாமல் அப்பகுதிகளை தனது நாட்டு வரைபடத்துடன் இணைத்து நேபாளம் புதிய வரைபடத்தை வெளியிட்டது.
அதோடு நேபாள நாட்டு பிரதமர் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகவே பேசி வந்தார். இந்நிலையில் தனது ஆட்சியை கலைப்பதற்கு இந்தியா முயற்சி செய்வதாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா குற்றம் சுமத்தி வந்தார். காட்மாண்டுவில் ஹோட்டல்கள் மற்றும் பல இடங்களில் ஆட்சியை கவிழ்க்கும் திட்டங்கள் நடைபெறுவதாக கூறிவந்தார். இன்னிலையில் நேபாளத்தின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றும் சொந்த கட்சியிலேயே பிரதமர் கே.பி.சர்மாவிற்கு எதிராக எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக வைக்கப்பட்ட கருத்துக்கள் இராஜதந்திர ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொருத்தமானவை இல்லை என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உணர்ந்ததை தொடர்ந்து ஜூன் 30 அன்று உயர் தலைவர்கள் பிரதமர் கே.பி.சர்மாவை பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரியுள்ளனர். இதனிடையே இன்று ஆளும் கட்சியின் முக்கிய நிலைக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அங்கு பிரதமர் கே.பி.ஷர்மா பதவி பற்றிய முடிவு தீர்மானிக்கப்படும் என தெரியவந்துள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் விரிசல்கள் வளர்ந்துவரும் நிலையில் பிரதமர் கே.பி.சர்மா இன்று மாலை ராஜினாமா செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.