Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து ஒரே விலையில் டீசல் விற்பனை… பெட்ரோல் விலை 9 காசுகள் உயர்வு…!!!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 9 காசுகள் உயர்ந்து ரூ.84.82 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஆரம்பத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பெரிதளவு மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் மாற்றமின்றி ரூ.84.73 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் டீசலின் விலை 30 நாட்களாக தொடர்ந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 9 காசுகள் உயர்ந்து ரூ.83.82 காசுகளாக விற்பனை செய்யப்படுகின்றது. 31 ஆவது நாளாக தொடர்ந்து டீசலின் விலை ரூ.78.86 என்ற விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Categories

Tech |