சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் இருக்கும் பட்டூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதுடைய குறளரசன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். இவர் இந்த சிறுமியை கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோர் குறளரசனிடமிருந்து தனது மகளை மீட்டு வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருப்பூருக்கு சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இதன்பிறகு சிறுமியின் பெற்றோர் அவரிடமிருந்து தன் மகளை மீட்டு வந்துள்ளனர்.
ஆனால் குறளரசன் வாழ்ந்தால் சிறுமியுடன் தான் வாழ்வேன் என்று கூறி அவரை திருப்பூர், செஞ்சி போன்ற பல்வேறு இடங்களுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். எனவே சிறுமியின் பெற்றோர் இது குறித்து திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குறளரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதை விசாரித்த நீதிபதி குறழரசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 4000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தைகள் நல அலுவலர் ரூபாய் 5 லட்சம் பணத்தை அரசிடம் இருந்து வாங்கி கொடுக்க வேண்டுமெனவும் நீதிபதி எழிலரசி கூறியுள்ளார்.