தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் சந்திராபுரத்திலிருந்து செரங்காடு செல்லும் சாலையில் உள்ள ஹோட்டல் அருகே சென்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி முன் விரோதம் காரணமாக சுரேஷ்குமார் என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொலை செய்தார்கள். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரின் நண்பர்களான இதயக்கனி, மணிகண்டன், பிரகாஷ், பிரவீன் குமார், குணா உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
இதில் சென்ற ஏழாம் தேதியே இதயக்கனி மற்றும் அறிவு பிரகாஷ் உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் குணா மீது ஆறு வழக்குகளும் பிரவீன் மீது இரண்டு வழக்குகளும் மணிகண்டன் மீது இரண்டு வழக்குகளும் இருக்கின்றது. இவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.