தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி காட்டன் தெருவில் மோகன் குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மோகன் குமார் சோனா நகர் பூங்கா அருகே இன்டர்நெட் இணைப்புக்காக வைத்திருந்த 38 இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளார். இதன் மதிப்பு 2 லட்சத்து 92 ஆயிரத்து 600 ரூபாய் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு மோகன்குமார் ஜாமீனில் வெளியே வந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளார்.
கடந்த மாதம் மோகன்குமார் அரசு டாஸ்மாக் மதுக்கடையில் துளையிட்டு மதுபானங்களை திருடியதாக பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் என்பவரை மோகன்குமார் மிரட்டி பணம் பறித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் மோகன் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு காவல்துறையினர் பரிந்துரை செய்தனர். அதன்படி போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மோகன்குமார் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.