கேம் விளையாடுவதற்கு பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மயிலாடுதுறை சீர்காழி அடுத்த கொண்டல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் பதினோராம் வகுப்பு மாணவி ஆதித்யா. இவர் ஆன்லைன் வகுப்பில் பாடங்களை கற்றுக்கொள்ள பெற்றோர் இவருக்கு செல்போன் புதிதாக வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் ஆதித்யா அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் மாணவியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி அவரது அறையில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
காலையில் மாணவி வெகுநேரமாகியும் அறையில் இருந்து வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்துக் கொண்டு சென்று பார்த்தபோது ஆதித்யா இறந்து கிடந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த அவர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.