Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக நடந்துருக்காங்க…. காவல்துறையினர் அதிரடி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் 4 வாலிபர்களை காவல்துறையினர் குண்டாஸில் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் அன்பு ராஜன் மற்றும் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார்கள். இதற்கிடையே தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாவூர்சத்திரத்தில் சேர்ம துரை என்பவரும் வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த 3 நபர்களும் பாளையங்கோட்டை மற்றும் நெல்லைக்குட்பட்ட இடங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் பாளையங்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் கொலை முயற்சி உட்பட சில செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து இந்த 4 நபர்களையும் குண்டாசில் கைது செய்ய திருநெல்வேலி மாநகரத்தில் துணை கமிஷனர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மாநகரத்தின் கமிஷனரான அன்பு இவர்கள் 4 பேரையும் குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் நெல்லை சந்திப்பு காவல்துறையினர் 4 நபர்களையும் குண்டாஸில் கைது செய்து பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |