தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வரும் தனுஷ் தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் சின்சியராக நடித்து வருகின்றார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மற்றும் நடிகர்களை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்காக பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்தி வெளியான நிலையில் தற்போது நடிகை கீர்த்தி ஷெட்டியிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.