Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தொடர்ந்து சாராயம் விற்பனை…. “தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது”… போலீசார் அதிரடி..!!

விழுப்புரம்  அருகே   சாராயம், மதுபாட்டில்களை தொடர்ந்து விற்பனை  செய்து வந்த நபரை  போலீசார் தடுப்புக்காவல்  சட்டத்தின்  கீழ்  செய்தனர். 

விழுப்புரம்  அருகே  உள்ள ஒருகோடி என்ற கிராமத்தில்  வசித்து  வருபவர்   ராஜாமணி. இவருக்கு  ரவீந்திரன்  என்ற மகன்  உள்ளார்.  இவருடைய  வயது  38.  இவர்  சாராயம்,   மதுபாட்டில்கள் விற்பனை செய்து  வந்துள்ளார்.     இவர்  மீது  சாராயம்,   மதுபாட்டில்கள்  சம்பந்தமான  பல்வேறு  வழக்குகள் உள்ளன.    ரவீந்திரனை  கடந்த  சில  வாரங்களுக்கு   முன்பு  தான்  விழுப்புரம்  மதுவிலக்கு அமல்பிரிவு  காவல்  துறை  கைது  செய்து  கடலூர் மத்திய சிறையில் அடைத்தது.

ஆனால்  இவர்   தொடர்ந்து  சாராய  வழக்குகளில்  ஈடுப்பட்டு  வந்ததால் இவருடைய  செயல்களை  தடுக்க  வேண்டும்  என்பதற்காக  குண்டர்  தடுப்பு சட்டத்தின்  கீழ்  கைது செய்ய வேண்டும்  என்று   கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்துள்ளார். அந்த  பரிந்துரையை  கலெக்டர்  மோகன்  ஏற்று  கொண்டு   குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  கைது  செய்ய  உத்தரவிட்டார்.  இதையடுத்து  கடந்த  17 ஆம்  தேதி   ரவீந்திரனை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் காவல்  துறையினர்   கைது  செய்தனர்.  கடலூர் சிறையில்  உள்ள  ரவீந்திரனுக்கு  சிறை அலுவலர்கள் உத்தரவு நகல் வழங்கினர்.

 

 

 

Categories

Tech |