தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் கணேஷ் நகரில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்துள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் போதுமான சி.சி.டி.வி. கேமராக்களும், பாதுகாப்புக்கு காவல்துறையினரும் இருப்பதில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து அங்குள்ள பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கீரனூரில் வசிக்கும் தேவராஜ் என்பதும் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.