கடந்த வாரம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் பாஸ்கர் என்ற நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரர் கே.பி.அன்பழகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதாவது காழ்ப்புணர்ச்சி காரணமாக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தனக்கு கிடைக்கவிடாமல் தொடர்ந்து கே.பி.அன்பழகன் இடையூறு செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கே.பி.அன்பழகன் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எனது குடும்ப உறுப்பினர்களை ஒப்பந்தம் எடுக்க விடாமல் நெடுஞ்சாலை அதிகாரிகளை மிரட்டி வருகிறார் என்றும் கூறியுள்ளார். எனவே இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பாஸ்கர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் பட்சத்தில் கே.பி.அன்பழகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.