Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து தொல்லை கொடுத்த வாலிபர்…. மாணவிக்கு நேர்ந்த துயரம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணலோடை பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த வாலிபர் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

எனவே மாணவி இதுபற்றி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |