சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள நத்தை மேடு பகுதியில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வெப்படை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி, செல்வம், ராதாகிருஷ்ணன், கோபால், பாலன் ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சூதாட்டத்தில் பயன்படுத்திய 2000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.