Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து நடந்த குற்ற செயல்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் பிள்ளையார் கோவில் தெருவில் வினோத்குமார்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் வினோத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடும் வினோத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி குண்டர் தரப்பு சட்டத்தின் கீழ் வினோத்குமாரை கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |